மியன்மார் ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
இன்று (22) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார்.
மேலும் சட்டவிரோத குடிவரவாளர்களாக இலங்கை நாட்டிற்கு வருகை தந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றோம் அவர்களுக்குரிய அனைத்து விடயங்களையும் முன்னெடுத்து வருகின்றோம் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்து சம்பவத்துடன் தொடர்புடைய 12 மாலுமிகள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நிலையில் 103 பேரும் தற்போது திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் இவர்களை நாளை அல்லது நாளை மறுதினம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மேலும் ரோஹின்யா மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அனைவரும் கூட்டாக இணைந்து அவர்களுக்குரிய சிறந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் பல்வேறு பட்ட விதத்தில் முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment