பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 87031 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 53058 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசு கட்சி 34168 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் புதிய ஜனநாயக முன்னணி 9387 வாக்குகளையும் ஜனநாயக தேசிய கூட்டணி 4868 வாக்குகளையும் பெற்றுள்ளது.
அத்துடன் தேசிய மக்கள் சக்தி தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் 9705 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2853 வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி 1749 வாக்குகளையும் புதிய ஜனநாயகம் முன்னணி 382 வாக்குகளையும் பெற்றுள்ளது.
இதேவேளை சேருவில தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளாக 27702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 9581 வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி 5543 வாக்குகளையும் புதிய ஜனநாயக முன்னணி 662 வாக்குகளையும் பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை வெளியாகிய வாக்கு வீதத்தின்படி தேசிய மக்கள் சக்தி திருகோணமலை தேர்தல் தொகுதியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியில் அருண் ஹேமச்சந்ரா 38,368 வாக்குகளையும் ரொஷான் அக்மீமன 25,817 அதிக விருப்ப வாக்குகளையும் பெற்றுள்ளார்.
மேலும் இலங்கை தமிழரசு கட்சியில் சண்முகம் குகதாசன் அதிக வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியில் இம்ரான் மஹ்ரூப் அதிக விருப்ப வாக்குகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment