திருமலை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருமலை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Share This



திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் இன்று (31) காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


குறித்த சடலம் மீகமுவ தன்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த றீட்டா பெரேரா (வயது 86) என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த கடற்கரையின் ஓரமாக கைப் பையும், ஆடைகளுடன்கூடிய பயணப்பையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவர் திருமணமாகாதவர் எனவும் தெரிய வருகின்றது.


குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment

Pages