சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள்- கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள்- கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை!

Share This

 



(எஸ். சினீஸ் கான்)

காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து  காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார் அவர்களிடம் (23) கோரிக்கை விடுத்தார்.


இது தொடர்பான கூட்டம் காத்தான்குடி நகர சபை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.


கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார், திட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம். திலகரத்னே, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏனைய அதிகாரிகள், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எஸ்.எம். அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டிருந்தனர்.


முதல் கட்டமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Pages