1887 ஏக்கர் காணியை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்-திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.குகதாஷன் கோரிக்கை! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

1887 ஏக்கர் காணியை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்-திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.குகதாஷன் கோரிக்கை!

Share This

 



துறைமுக அதிகார சபையினரால் கையகப் படுத்தியுள்ள 5226 ஏக்கர் நிலப் பகுதியில் 1887 ஏக்கர் நிலப் பகுதில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர் ஆகவே இந்தப் பகுதியை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.குகதாஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருகோணமலை பட்டணமும் சூழலும்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

( 2025/01/03)  பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 


இந்தக் கூட்டத்தில் பங்குகொண்ட உரையாற்றும்போதே இக்கோரிக்கையை முன் வைத்தார்.


மேலும் அவர் உரையாற்றுகையில்-


துறைமுக அதிகார சபையினரால் கையகப் படுத்தியுள்ள 5226 ஏக்கர் நிலப் பகுதியில் 1887 ஏக்கர் நிலப் பகுதில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.


 அத்துடன்  வெல்வெறி பகுதியில் அரசாங்கத்தினால் கையகப் படுத்தப்பட்ட நிலத்தையும் உடனடியாக விடுவித்து உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் இதன் போது கேட்டுக் கொண்டார்.


திருகோணமலை நகரத்தில் அமைந்துள்ள மங்கேஷசர்  விளையாட்டு மைதானம் பாரம்பரியமாக திருகோணமலையில் பல சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தந்தது எனவும் இந்த விளையாட்டு மைதானத்தை  மீண்டும் சரி செய்து உருவாக்குவதன் மூலம் பல இளம் விளையாட்டு வீரர்களது ஏக்கத்தை தீர்ப்பதோடு அல்லாமல் சர்வதேச போட்டிகளை நடத்தி நாட்டிற்கு வருமானத்தையும் வெளிநாட்டு நாணய மாற்று வருவாயையும் பெருக்க இயலும் எனவும் கேட்டுக் கொண்டார்.



திருகோணமலை பொது வைத்தியசாலையில்  போதிய வசதியின்மையினால் மகப்பேறு காலத்தில் பெண்கள் பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர் ஆகவே சிறப்பான நடுவம் ஒன்று அமைக்க வேண்டுமென்றும், மருத்துவமனைக்கு செல்லும் வீதியினை செப்பனிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


மேலும், திருகோணமலை நகர சபைக்குற்பட்ட பகுதியில் 03 மதகுகளும்,  திருகோணமலை உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் 12 வீதிகளும், 07 மதகுகளும் மறு சீரமைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.


No comments:

Post a Comment

Pages