திருகோணமலை பன்குளம் மற்றும் அவ்வை நகர் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் பன்குளம் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யானை மின் வேலிகள் பொருத்தப்பட்டிருக்கின்ற போதிலும், சிறந்த முறையில் பராமரிக்கப்படாமையினால் யானைகள் கிராமத்துக்குள் உட்புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதுடன் வீட்டுத்தோட்ட பயிர்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் (03) அவ்வை நகர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மாணவர்கள் சென்றபோது பாடசாலை நுழைவாயிலில் யானை நின்றதாகவும் யானையை மாணவர்கள் விரட்டிய சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.
காட்டு யானைகளின் தொல்லை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment