தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் இன்று (01) காலை எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த காணிகளை கையகப்படுத்தும் முகமாக அப்பகுதிகளில் பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தியுள்ளதாகவும் இந்த காணிகளில் தொல்லியல் சின்னங்கள் எவையும் இல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இந்த காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
No comments:
Post a Comment