ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு நிகழ்வும் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 41வது மாணவர் வெளியேற்று வைபவமும் (18) சனிக்கிழமை இடம்பெற்றது.
ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளின் போது பிரதம அதிதியாக ICST பல்கலைக்கழகத்தின் தாபகரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திரு P. தனேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பனிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு இன்று வைபவ ரீதியாக காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மட்/ ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்பள்ளி மாணவர் வெளியேற்று வைபத்திலும் அதிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment