( அப்துல்சலாம் யாசீம்)
விருந்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருகோணமலை- வான்எல குளத்தில் சடலமாக (02) மீட்கப்பட்டுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆயிலியடி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் கன்தளாய்- வான் எல இலக்கம் 434/2 இல் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.நிரோஷன் (40வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
31.12.2024 மாலை அன்று விருந்துக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற நிலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லையெனவும் இதனையடுத்து அவரை தேடிய போது வான் எல குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டப் பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கன்தளாய் வைத்திசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்து மரண சம்பவம்
No comments:
Post a Comment