திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்தரை அவர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.
கிளிவெட்டியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாருக்கு மலர்மாலை அணிவித்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment