கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கிண்ணியா நகர சபையில் நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, வருமானத்தை ஈட்டுவதில் இருக்கின்ற இடையூறுகள் மீன் சந்தை கட்டிட நிர்மாணம், கழிவு முகாமைத்துவ நிலையம் எதிர் நோக்குகின்ற சவால்கள், இடத்தட்டுப்பாடு, யானை வேலி அமைத்தல், சுற்றுலா துறையை மேம்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
கிண்ணியா நகர சபை சார்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக ஆளுநரினால் இணக்கமும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment