திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோப்ப நாய்களின் உதவியுடன் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை (03) இடம்பெற்றுள்ளது.
மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி கீர்த்தி சிங்ஹவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி SI கருணாரத்ன மற்றும் SI ஜயம்பத்தி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் போதை வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சந்தேக நபர்களின் வீடுகள் வீடுகள் மோப்ப நாய்களின் உதவியுடன் சுற்று வளைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த மோப்ப நாய்களின் ஊடாக கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரில் பெண் ஒருவர் அடங்குவதாகவும் 35 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் ரொட்டவெவ,எத்தாபெந்திவெவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment