தேசிய மக்கள் சக்தியின் வசமுள்ள திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சேருவில பிரதேச சபையின் தவிசாளர் எம்..ஜி.துஷார சம்பத்தினால் பாதீடானது இன்று (24) திங்கட்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்டது.
சேருவில பிரதேச சபையின் 16 மொத்த உறுப்பினர்களிர் 15 உறுப்பினர்கள் மாத்திரமே இன்றைய பாதீட்டுக்கு சமூகமளித்திருந்தனர்.சர்வஜன பலய கட்சியின் உறுப்பினர் சபை அமர்வுக்கு வருகை தரவில்லை இதனால் அவ் உறுப்பினர் வாக்களிப்பிலும் கலந்து கொள்ளவில்லை.
சபை அமர்வில் கலந்து கொண்ட 15 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்தார் . ஏனைய 14 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
அந்த வகையில் பாதீட்டுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,இலங்கை தமிழரசு கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
பாதீட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ,மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment