திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி இன்று (08) உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம்தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்றுவந்தவர் எனவும் தெரியவருகிறது.
உயிரிழந்தமை தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment