அரசியல் தீர்வான சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி நிற்கும் கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கினை செலுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று (08) விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் AHRC நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட பிரதேச சிவில் அமைப்புக்கள் மற்றும் மாற்றத்துக்கான இளைஞர் வலையமைப்பு உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 14/11/2024 ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு
வாக்களிக்கும் உரிமையும், பொதுத்தேர்தலின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பாக தெளிவூட்டும் விதத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிவில் வலையமைப்புகளின் கோரிக்கையான இனப் பிரச்சனைக்கு தீர்வினை காணும் வகையில் நிலையான அரசியல் தீர்வான சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி நிற்கும் கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கினை செலுத்த கோரியே இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது வளவாளராக மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ஏ.எல். இசைடீன் AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கே. லவகுசராசா, பிரதி இணைப்பாளர் ஏ.மதன் மற்றும் திட்ட முகாமையாளர் செல்வி. என். மிரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இக்கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளின் பிளவு தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளை உருவாக்குவதற்கான மக்களின் பங்களிப்பு பற்றியும் மக்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 115 பிரதிநிதிகள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment