தொல்லியல் குழுவை கலைக்க வேண்டும் என கிழக்கு புத்திஜீவிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் காணப்படும் இடங்களை கண்டறிவதற்கும் அவற்றை பரிபாலிக்கவும் முன்னாள் ஜனாதிபதி கோதாபாயவினால் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் – மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி உடனடியாக கலைக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண புத்திஜீவிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்களின் பூர்வீக நிலங்களையும்,வாழ்விடங்களையும்தொல்பொருள் எனவகைப்படுத்தி அவற்றை சுவீகரிக்கும் நோக்கில் இக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் இருந்த பலர் அவர்கள் நியமிக்கப்பட்டபோது இருந்த பதவிகளில் தற்போது இல்லை.இக்குழுவில் 11 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இக்குழுவில் எல்லாவள மேதானந்த தேரர் ,பணமுரே திலகவன்ச தேரர் ஆகிய புத்த பிக்குகளும் பதவி வழியாக பின்வரும் அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
டொக்டர் செனரத் பண்டார திசாநாயக்க தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்
சந்ரா ஹேரத் – ஆணையாளர் நாயகம் , காணித் திணைக்களம்
ALSC. பெரேரா – நில அளவைகள் திணைக்கள ஆணையாளர்
பேராசிரியர் RM.சோமதேவ – சிரேஸ்ட விரிவுரையாளர் , களனிப் பல்கலைக்கழகம்
பேராசிரியர். கபில குணவர்தன – மருத்துவ பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்.
தேசபந்து தென்னக்கோன் – சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணம்
H.E.M.W.G. திசானாயக்க – கிழக்கு மாகாண காணி ஆணையாளர்
திலித் ஜயவீர – தவிசாளர். தெரண தொலைக்காட்சி
2020 ஜூனில் நிறுவப்பட்ட இச்செயலணி மேலும் வலுப்படுத்தும் வகையில் 2020 ஆகஸ்ட் மாதம் மீண்டும் நான்கு தேரர்கள் உள்வாங்கப்பட்டனர்.
சிறி ரத்னபால உபாலி தேரர் – அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க
டொக்டர் பஹமுனே சுமங்கள நாயக்க தேரர் – மல்வத்து பீடத்தின் பொதுச் செயலாளர்
டொக்டர் மெதகம தம்மானந்த தேரர் – அஸ்கிரிய பீடத்தின் பொதுச் செயலாளர்
சுமங்கள தேரர் – அஸ்கிரிய பீடம்
இந்த செயலணியினது செயற்பாடுகள் தொடர்பில், சிறுபான்மையினரிடையே பல்வேறு சந்தேகங்களும் அச்சமும் ஏற்பட்டு இருந்தன. அப்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் மிகக்கடுமையாக இக்குழுபற்றி விமர்சித்து இது கலைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தும் எதுவும் நடைபெறவில்லை.
முன்னாள் ஜனாதிபதி பதவி இழந்ததும் இக்குழுவின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டபோதிலும் குழு இன்னும் உயிர்ப்புடனுள்ளது.
சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களின் குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் இருப்புக்கு ஆபத்தான இக்குழு உடனடியாக கலைக்கப்பட்டு வெற்றும் வெறிதுமாக ஆக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment