சீன அரசாங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சீன அரசாங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

Share This


 திருகோணமலை மாவட்டத்தில் சீன அரசாங்கத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று (29) வழங்கி வைக்கப்பட்டன.


 சீன தூதுவர் H.E.Qi Zhenhong அவர்களினால் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து குறித்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு தலா 6500 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன் மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு இன்று (29) குறித்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் சீனத்தூதுவர் H.E.Qi Zhenhong, உள்ளிட்ட குழுவினர், அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராய்ச்சி, மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுகுணதாஸ், ஆளுநரின் செயலாளர் அருள்ராஜ், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இராஜசேகர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.




No comments:

Post a Comment

Pages