திருகோணமலை – டொக்கியாட் வீதி Rainbow Hotel க்கு பின்னால் உள்ள கடற்கரையில் (28) குளித்து கொண்டிருந்த 03 அமெரிக்க பிரஜைகள் சுழியில் சிக்குண்டு ஆழத்திற்கு (சுமார் 250 மீட்டர் தூரம்) இழுத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸ் சார்ஜன் நயீம் (54427) அவர்களின் தலைமையில் திஸ்ஸாநாயக்க (57681), பொலிஸ் சார்ஜன் குமாரசிங்க (60563), பொலிஸ் சார்ஜன் சுரேந்திர (66364) பொலிஸ் சார்ஜன் நிசங்க (75243) பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயதிலக்க (82652) ஆகியோர் சேர்ந்து அனர்த்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட 03 அமெரிக்க பிரஜைகளையும் எந்த ஒரு ஆபத்தும் இன்றி 45 நிமிட பாரிய போராட்டத்தின் பின்னர் அவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்து தங்கியிருந்த இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment