திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன அவர்களின் பங்கேற்புடன் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த விவசாயக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள், விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் மற்றும் கருத்துக்கள் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
இக்கூட்டத்தில் மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.சுப்ரமணியம், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் கலாநிதி T.கருணைநாதன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment