திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜயாநகர் கிராமத்தில் வசிக்கும் கணவனை இழந்த தாய் பலவருட காலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த தனது காணியில் மேற்கொண்டுள்ள விவசாயத்தை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றார்.
குறித்த தாய் பல்லுவக்குளம் பகுதியில் 4.5 ஏக்கரில் 2012ஆம் ஆண்டில் இருந்து நெற்செய்கையினையும், கச்சான், உழுந்து, பயறு போன்ற பயிர்களையும் செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2024 ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிலர் அவ்விடத்திற்கு வந்து பார்வையிட்டு புகைப்படமும் எடுத்துச் சென்றுள்ளனர். மறுநாள் 21ஆம் திகதி குச்சவெளி பொலிசாரினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு தொல்லியலுக்குரிய கல்லு போட்டிருக்கின்ற பகுதியில் விவசாயம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 நவம்பர் மாதம் 27ஆம் திகதி குறித்த பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த காணியில் 2012ஆம் ஆண்டில் இருந்து தாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்குரிய அனைத்து ஆவணங்களும் இருப்பதாகவும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எவ்வித அறிவித்தலும் இன்றி அரிமலை பிக்குவின் தலைமையில் தமது வயலின் ஓரமாக குறித்த கல்லு போடப்பட்தாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் பல வருட காலமாக பயிர் செய்து வந்த கணிக்குள் தற்போது செல்ல பயமாக இருக்கிறது எனவும் கடன்பட்டு செய்த வேளான்மை குடலைப் பயிராக மாறியிருக்கின்றதுடன் அழியும் நிலை காணப்படுவதாகவும் இது அழியுமானால் நாம் தற்கொலைதான் செய்ய வேண்டும் என கவலை வெளியிடுகின்றனர்.
தொல்லியல் எனும் பெயரில் சில புத்த பிக்குகளால் புதிது புதிதாக மக்களினுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment